» சினிமா » செய்திகள்

காலாவுக்கு பல இடங்களில் சென்சார் வெட்டு: யுஏ சான்று

வெள்ளி 6, ஏப்ரல் 2018 3:33:26 PM (IST)

ரஜினிகாந்த் நடித்த காலா படத்துக்கு யுஏ சான்று வழங்கியுள்ளது மண்டல தணிக்கைக் குழு.

கபாலிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் காலா. இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 27-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் நடந்து வரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்திடம் சிறப்பு அனுமதிக் கடிதம் வாங்கி, இந்தப் படத்தை சென்சாருக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் காலா சென்சார் செய்யப்பட்டதை படத்தைத் தயாரித்த வுண்டர்பார் நிறுவனம் உறுதி செய்துள்ளது. சில கட்டுகளுடன் படத்துக்கு யு ஏ சான்று வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் வன்முறைக் காட்சிகள், அரசியல் சர்ச்சைக் காட்சிகள் அதிகம் இருந்ததால் சில வெட்டுகளை சென்சார் பரிந்துரைத்துள்ளது. இந்த வெட்டுகள் இல்லாமல் ஏ சான்று தருவதாகக் கூறியதால், யுஏக்கு ஓகே சொன்னதாம் படக்குழு.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிApr 6, 2018 - 03:49:35 PM | Posted IP 141.1*****

முழு படத்தையும் வெட்டினாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு தேவையும் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored AdsTirunelveli Business Directory