» சினிமா » செய்திகள்

நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவதோ சூரப்பா!: நடிகர் விவேக் கவிதை

சனி 7, ஏப்ரல் 2018 11:31:07 AM (IST)

"நாங்கள் கேட்பது நீரப்பா; நீங்கள் தருவதோ சூரப்பா! அண்ணன் தம்பிகள் நாமப்பா; நம்மை பிரிப்பது நீராப்பா?" என  நடிகர் விவேக் டுவிட் பதிவு செய்து உள்ளார்..

காவிரி விவகாரம் குறித்து நடிகர் விவேக் அவ்வப்போது டுவிட்  பதிவு செய்து வருகிறார்.. சமீபத்தில் அன்பு திரையுலக நண்பர்களே, எந்த புதிய டீசர் டிரைலரையும் இப்போது வெளியிடாதீர்கள், அன்பு திரையுலக நண்பர்களே, எந்த புதிய டீசர் டிரைலரையும் இப்போது வெளியிடாதீர்கள் என  கூறி இருந்தார்..
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் வலுத்துவரும் நிலையில், நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கே உரித்தான் நகைச்சுவை நடையில் ட்வீட் செய்திருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கும் கண்டனம் தெரிவித்ததோடு காவிரி நீரையும் கோரி எதுகை மோனையாக ட்வீட் செய்திருக்கிறார்.

நாங்கள் கேட்பது நீரப்பா!
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீராப்பா?
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா.

இவ்வாறு அவர் ட்வீட் செய்திருக்கிறார்.


மக்கள் கருத்து

TamilanApr 10, 2018 - 06:36:11 PM | Posted IP 141.1*****

Very Gud Sir sema

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory