» சினிமா » செய்திகள்

விஜய் ஆண்டனியின் காளி படத்தை வெளியிட தடை

திங்கள் 9, ஏப்ரல் 2018 7:18:01 PM (IST)விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இசையமைப்பாளரும்,நடிகருமான விஜய் ஆண்டனி,அண்ணாதுரை என்ற படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து காளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதில் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அதில் அண்ணாதுரை படத்தால் தமக்கு ரூ.4.73 கோடி நஷ்டம் ஏற்பட்டது.எனவே அந்த நஷ்டத்தை வழங்காமல், காளி படத்தை திரையிட தடை விதிக்கக்கோரி மனுவில் கூறியிருந்தார். 

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காளி படத்தை வெளியிட தடை விதித்தது. மேலும் ஏப்.11-க்குள் ரூ.4.73 கோடி நீதிமன்றத்தில் செலுத்தி னால்படத்திற்கு தடை நீங்கிவிடும், இல்லாவிட்டால் ஏப்.11-க்கு பிறகும் தடை தொடரும் என்று தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored AdsTirunelveli Business Directory