» சினிமா » செய்திகள்

தீபிகா படுகோனேவுடன் ரகசிய திருமணமா? : ரன்வீர்சிங் விளக்கம்

செவ்வாய் 10, ஏப்ரல் 2018 10:37:03 PM (IST)தீபிகா படுகோனேவுடன் சுவிட்சர்லாந்தில் ரகசிய திருமணமா என்பதற்கு ரன்வீர்சிங் உண்மையை வெளியிட்டு உள்ளார்.

நடிகை தீபிகா படுகோன் பல வருடங்களாக நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவர்கள் இந்த வருட இறுதியில் சுவிட்சர்லாந்தில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் செய்தி வெளியானது. பத்மாவத்  பட விவகாரத்திற்கு பின் இந்த காதல் விவகாரம்  மீண்டும் பூதாகரமானது. அப்போதும் தீபிகா மவுனமாகவே இருந்தார். இந்நிலையில்தான் தீபிகாவிற்கும் ரன்வீருக்கும் சுவிட்சர்லாந்தில் திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் தீ போல் பரவத் தொடங்கி இருக்கிறது. 

இந்த ஜோடிக்கு இந்த வருட இறுதியில் செப்டம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்கு இடையில் திருணம் நடக்கலாம் என சமூக வலைத்தளத்தில் வண்டி வண்டியாக எழுதி வருகிறார்கள். இதற்காக இந்த இரண்டு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தேதியை இந்த ஜோடி உறுதி செய்ய உள்ளதாக பாலிவுட் பட்சிகள் கூறுகிறார்கள். அது ஏன் சுவிட்சர்லாந்து? அந்த நாட்டிற்கான இந்திய சுற்றுலா தூதுவராக ரன்வீர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே அங்கிருந்து இந்த ஜோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று அவர்கள் அங்கே செல்லலாம் என்ற பேச்சு அடிப்பட்டு வருகிறது.

இது குறித்து முதன் முதலாக வாய் திறந்த ரன்வீர் சிங் ; தீபிகா என் வாழ்க்கையில் மிக ஸ்பெஷலான நபர். அவரைக் கண்டு நான் அதிகப்படியாக வியக்கிறேன். அவர் ஒரு புத்திசாலி நடிகை. அவரது திறமைகளை காக்டெய்ல் பார்ட்டிக்குப் பிறகுதான் கண்டுப்பிடித்தேன். ஏனென்றால் அவர் கமர்ஷியலான வெற்றியை தந்தவர். ஆனால் நான் அதை முன் கூட்டியே அடையாளம் கண்டு கொண்டிருக்கிறேன். இப்போது அவரது பெர்ஃபாமென்ஸ்  அட்வான்ஸ்டு லெவலில் சரியாக உள்ளது. 

கோலியான் கி ரஸ்லீலா ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். நீங்கள் அதில் பார்க்க முடியும். அதை நம்ப முடியும். அந்த பாதையில் அவரது திறமை இருந்தது. இன்றைக்கு இரண்டு ஷிப்ட்டில் மும்முரமாக இருக்கும் ஒரு நடிகையை பற்றி நான் நினைக்க முடியாது. நான் மறுபடியும் ராம் லீலா படப்பிடிப்பை நினைத்துக் கொள்கிறேன். நான் தீவிரமாக அன்பு வைத்திருக்கிறேன். ஆனால் அவர் அமைதியாக இருக்கிறார்.  தீபிகா புத்திஸ்ட்டை போல அமைதியானவர். அவர் இதமான நபர், உண்மையானவர். மிகமிக தன்மையானவர். அவரது அழகு அகமும், புறமும் ஒன்றுபோலவே இருக்கும்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் இப்போதே கூற முடியாது. ஏனென்றால் நாங்கள் இருவருமே இப்போது படங்களில் மும்முரமாக இருக்கிறோம். அவர் இப்போது கொஞ்சம் ஓய்வில் இருக்கிறார். ஆகவே திசைத் திருப்ப வேண்டாம். ஒருவேளை எதிர்காலத்தில் ஏதாவது அறிவிப்பை வெளியிட வேண்டுமென்றால் நீங்கள் எல்லோரும் கேட்கும்படி வீட்டு மொட்டைமாடியில் ஏறி நான் சத்தமாக கத்திச் சொல்வேன். அந்த நேரம் வரும்போது எனக்குத் தெரியும். அந்தச் சூழல் முக்கியம். எல்லா பெண்களின் கனவு இது. இப்போதைக்கு நான் எனது தொழிலை பற்றி நினைத்து கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் திருமண வாழ்வில் அடிஎடுத்து வைப்பது பற்றி ஒரு பேட்டியில் பேசிய தீபிகா படுகோனே, "திருமணம் என்பது என் வாழ்வில் முக்கியமான விஷயம் தான். திருமணத்திற்கு பிறகு நான் ஒரு வேலை செய்யும் மனைவி - தாயாகத்தான்  இருப்பேன். சினிமாவில் நடிப்பதை நிறுத்தமாட்டேன். நான் வேலையில்லாமல் வீட்டில் இருந்தால் என்னுடன் இருபவர்களுக்கு தான் பைத்தியம் பிடித்துவிடும்" என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored AdsTirunelveli Business Directory