» சினிமா » செய்திகள்

திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள்: பிரபுதேவா வேண்டுகோள்

திங்கள் 16, ஏப்ரல் 2018 5:50:55 PM (IST)

தயவுசெய்து திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள் என பிரபுதேவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் மெர்க்குரி. இந்தப் படம், சைலண்ட் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ள இந்தப் படம், தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டம் காரணமாக தமிழில் மட்டும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில், தயவுசெய்து திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரபுதேவா.

இதுகுறித்து ட்விட்டரில் இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "எல்லாருக்கும் வணக்கம். ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் மெர்க்குரி ரிலீஸாகியுள்ளது. எல்லாருக்கும் பிடித்திருக்கிறது; நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் ரிலீஸாகவில்லை. ஆனால், சீக்கிரம் ரிலீஸாகிவிடும். அதுவரைக்கும் நீங்கள் பைரசி, திருட்டு விசிடி இந்த மாதிரியெல்லாம் படம் பார்க்காமல், தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். வேறென்ன கேட்கப் போகிறேன்... இதுதான்.

இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் உங்களுக்காகப் புதிதாக யோசித்து, புதுவிதமான படத்தை கொடுத்திருக்கிறார். அதேமாதிரி தயாரிப்பாளரும் அவ்வளவு பணம் போட்டு, டீம் ஒர்க்கா இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணியிருக்காங்க. திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், தியேட்டருக்கு வந்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார் பிரபுதேவா.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory