» சினிமா » செய்திகள்

மணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப்பு

புதன் 18, ஏப்ரல் 2018 10:59:07 AM (IST)தனியார் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் மணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப்பு தெரிவித்தார்.

நடிகர் ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. 2005-ல் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமான அவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் தேடியும் பொருத்தமான மணப்பெண் அமையவில்லை. இதனால் டெலிவிஷன் நிகழ்ச்சி மூலம் மணப்பெண்ணை தேர்வு செய்ய முடிவு செய்து தன்னை மணக்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தார். 

ஆயிரக்கணக்கான பெண்கள் அவரை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தனர். அதில் இருந்து 16 பேரை தேர்வு செய்து நேர்காணல் நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. போட்டியில் ஒவ்வொரு பெண்ணாக வெளியேற்றப்பட்டு சுஷானா, அகார்தா, சீதாலட்சுமி ஆகிய 3 பேர் இறுதி போட்டிக்கு வந்தனர். 

இவர்களில் இருந்து ஒருவரை ஆர்யா மணப்பெண்ணாக தேர்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று இரவு டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. மூன்று பேருமே மணக்கோலத்தில் வந்து இருந்தனர். ஆனால் யாரையும் மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்யவில்லை. ஒருவரை தேர்வு செய்தால், மற்ற 2 பெண்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் மனம் புண்படுவார்கள். எனவே இந்த மேடையில் என்னால் மணப்பெண்ணை தேர்வு செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored AdsTirunelveli Business Directory