» சினிமா » செய்திகள்

ஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. மெர்க்குரி!

வியாழன் 19, ஏப்ரல் 2018 11:52:43 AM (IST)

தமிழகத்தில் சினிமாத்துறை ஸ்ட்ரைக்கு பிறகான ரிலீஸில் முதல் படமாக கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி படம் ரிலீஸாக இருக்கிறது. 

தமிழக அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையால், உடன்பாடு எட்டப்பட்டு தமிழ் திரையுலகினரின் ஸ்ட்ரைக் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இந்த வெள்ளிக்கிழமை முதல் படங்கள் ரிலீஸ் ஆகத் தொடங்கும் என அறிவித்தார்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 20) முதல் ஷூட்டிங், டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட சினிமாத்துறையின் பிற பணிகளும் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் விஷால். திரையுலகினர் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்றதையடுத்து எப்போது புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் எனும் கேள்வி எழுந்தது. நேற்று இதுதொடர்பாகப் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் இந்த வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்ட்ரைக்கு பிறகான ரிலீஸில் முதல் படமாக கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி படம் ரிலீஸாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் 13-ம் தேதி அன்றே இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பிறகு முடிவு மாற்றிக்கொள்ளப்பட்டு தமிழகம் தவிர மற்ற இடங்களில் மட்டும் வெளியானது. வரும் ஜூன் 1 முதல் தமிழ் சினிமா டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பான விஷயங்களைப் பேச வரும் சனிக்கிழமை நடிகர் சங்க கூட்டம் நடைபெறவுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. படங்களின் ரிலீஸை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அனைத்து திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். டிக்கெட் கட்டணம் ரூ. 150-க்கும் மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். டிக்கெட்டுகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பறக்கும் படை அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் விஷால்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory