» சினிமா » செய்திகள்

பிரபல டி.வி தொகுப்பாளினி விபத்தில் மரணம்!

செவ்வாய் 8, மே 2018 4:35:06 PM (IST)

பிரபல மலையாள டி.வி தொகுப்பாளினியும், செய்தி வாசிப்பாளருமான சூர்யா வாசன் நேற்று கோட்டயத்தில் விபத்தில் மரணமடைந்தார். 

கேரள மாநிலம், கோட்டயத்தில், தனது சகோதரர் அனந்தபத்மநாபனுடன் சூர்யா இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக வேன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு விரைந்த போதும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.

கேரள காவல்துறையினர் விபத்துக்குக் காரணமான வேன் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. மரணமடைந்த சூர்யாவுக்கு இன்னும் திருமணமாகியிருக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் அவரது தந்தை காலமாகியிருந்தார். மலையாள டி.வி சேனல் வட்டாரங்கள் மிகவும் பிரபலமான சூர்யாவாசனின் மறைவு அங்கிருக்கும் டி.வி பிரபலங்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சூர்யா வாசனின் மறைவுக்காகத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory