» சினிமா » செய்திகள்

ரஜினியின் காலா பாடல்கள் இணையத்தில் வெளியீடு

புதன் 9, மே 2018 11:33:01 AM (IST)

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியானது.

கபாலி படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிக்க பா.இரஞ்சித் இயக்கியுள்ள படம் காலா. இதை தனுஷ் தயாரித்துள்ளார். இப்படம் ஜூன் 7-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், காலா படத்தின் பாடல்களை நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் இன்று (புதன்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகியுள்ள 9 பாடல்களையும் அவர் வெளியிட்டார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதில், ரஜினிக்கு நெருக்கமான முக்கிய திரையுலகினர் கலந்துகொள்கிறார்கள். அதோடு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் மொத்தம் 8,500 பேருக்கு இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ரஜினியின் திரைப்படம் சார்ந்த நிகழ்வில் அவரது அரசியல் கட்சி சார்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory