» சினிமா » செய்திகள்

சண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதி: விஷால் அறிவிப்பு!

செவ்வாய் 15, மே 2018 11:15:07 PM (IST)

சண்டக்கோழி 2 படத்தை செப்டம்பர் 18 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் செய்ய விஷால் திட்டமிட்டு உள்ளார். 

விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இரும்புத்திரை படம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து தனது அடுத்தப்படமான சண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கும் இப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. 

இவர்களுடன் சூரி, சதீஷ், ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஷாலின் 25 வது படமாக உருவாகும் சண்டக்கோழி 2 படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், "சண்டக்கோழி 2 முந்தைய படத்தை விட பல மடங்கு நன்றாக வந்திருக்கிறது. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. செப்டம்பர் 18 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம். சங்கத்திலும் அதற்கான அனுமதி கேட்க இருக்கிறோம்.” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory