» சினிமா » செய்திகள்

சவுதியில் வெளியான முதல் இந்திய படம்: ரஜினியின் காலா சாதனை

வெள்ளி 8, ஜூன் 2018 11:16:12 AM (IST)

சவுதியில் வெளியான முதல் இந்திய படம் என்ற புதிய சாதனையை ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் நிகழ்த்தி உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹூமா குரேஷி, ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி, நானாபடேகர் ஆகியோர் நடித்துள்ள காலா படம் உலகம் முழுவதும் 1,700-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. தமிழ் நாட்டில் 500-க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் உற்சாகத்தோடு தியேட்டர்களில் திரண்டு படம் பார்த்தனர்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் கொடி தோரணங்களால் விழாக்கோலம் பூண்டு இருந்தது. மும்பை நகரையும் காலா ஜுரம் தாக்கியது. படத்தில் ரஜினி அணிந்திருந்த கருப்பு வேட்டி, கருப்பு சட்டை அணிந்தும் முதுகில் ரஜினியின் உருவப்படம் வரைந்தும் ரசிகர்கள் படம் பார்க்க வந்தனர். படத்தை பார்த்து விட்டு ரஜினியின் நடிப்பு பற்றி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டனர். ஏற்கனவே பில்லா, பாட்ஷா, தளபதி என்று தாதா கதைகளில் ரஜினி நடித்துள்ளார். அந்த வரிசையில் காலாவும் தாதா படமாக வந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை காணமுடிந்தது.

சவுதி அரோபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை காலா பெற்றுள்ளது. அந்த நாட்டில் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட தடை சமீபத்தில் நீக்கப்பட்டது. இதனால் புதிய தியேட்டர்கள் கட்டப்பட்டு சமீபத்தில் பிளாக் பேந்தர் என்ற ஹாலிவுட் படம் வெளியிடப்பட்டது. அதன்பிறகு இப்போது காலாவை அங்கு திரையிட்டனர். இது காலாவுக்கு கிடைத்த பெருமையாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவிலும் காலா படம் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது.

சென்னையில் காலா படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு டைரக்டர் பா.ரஞ்சித் நேரில் சென்று ரசிகர்களை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-"நான் ரஜினிகாந்தை வைத்து ஏற்கனவே கபாலி படத்தை எடுத்தேன். இப்போது காலாவை இயக்கி உள்ளேன். இந்த படத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சினைகளை சொல்லி இருக்கிறேன். காலா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினிகாந்தின் அரசியலுக்காக இந்த படத்தை எடுக்கவில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக எடுக்கப்பட்ட படம். கர்நாடகத்தில் சில இடங்களில் காலா வெளியாகவில்லை. இது வருத்தம் அளிக்கிறது.” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory