» சினிமா » செய்திகள்

விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் 11ம் தேதி வெளியீடு!!

சனி 9, ஜூன் 2018 11:26:42 AM (IST)கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிந்த நிலையில், சமீபத்தில் தணிக்கை குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழை் கிடைத்தது.  அதுமுதல் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டிரைலர் வருகிற 11ம் தேதியன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இந்தி டிரைலரை நடிகர் அமீர் கானும், தெலுங்கு டிரைலரை ஜுனியர் என்.டி.ஆரும், தமிழில் ஸ்ருதிஹாசனும் வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலரை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்வதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory