» சினிமா » செய்திகள்

காலா இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு வெங்கட் பிரபு பாராட்டு

சனி 9, ஜூன் 2018 3:59:22 PM (IST)

"என்னைப் பொறுத்த வரை "காலா"தான் இதுவரையிலான உனது சிறந்த படம்" என்று பா.இரஞ்சித்துக்கு அவரது குரு  வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் வியாழனன்று  வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  கிடைத்துள்ளது. இந்நிலையில் இதுவரையிலான உனது சிறந்த படம் இது என்று பா.இரஞ்சித்துக்கு அவரது குரு வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் பா.இரஞ்சித். அவருடன் "கோவா" படத்தில் பணியாற்றிய பொழுது, அபபடத்தின் தயாரிப்பாளரான சவுந்தர்யா ரஜினிகாந்துடன் ஏற்பட்ட அறிமுகத்தின் காரணமாகவே, அவருக்கு ரஜினிகாந்தின் கபாலி படத்தினை இயக்கம் வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது காலா படத்தினையும் இயக்கியுள்ளார். 

தற்பொழுது வெளியாகியுள்ள காலா படத்தினை பார்த்து விட்டு இயக்குநர் வெங்கட் பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: என்ன ஒரு படம்! இதை விரும்புகிறேன். இரஞ்சித், உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. என்ன முதிர்ச்சி! என்ன உருவாக்கம்! என்ன தகவல்கள்! என்ன பிரமாண்டம்! என்ன நடிப்பு! என்ன சமநிலை!  என்னைப் பொறுத்த வரை இதுதான் இதுவரையிலான உனது சிறந்த படம்! தலைவா லவ் யூ! தொழில்நுட்ப ரீதியில் பிரமாதம்! நடிப்பில் நானா படேகர்,ஈஸ்வரி ராவ் மற்றும் சமுத்திரக்கனி எனது தேர்வு!

அத்துடன் திலீபன், மணிகண்டன் மற்றும் அவரது தோழியாக நடித்திருக்கும் பெண் ஆகியோரையும் குறிப்பிட வேண்டும். இந்த் கதையின் மீது நம்பிக்கை வைத்து அதை தயாரித்த சகோதரர் தனுஷூக்கு நன்றி. இதனை மிகவும் விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory