» சினிமா » செய்திகள்

கமலின் விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ்

திங்கள் 11, ஜூன் 2018 12:12:05 PM (IST)

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், உட்பட பலர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் 2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஆக, ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஸ்வரூபம் 2 படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இசை - ஜிப்ரான், பாடல்கள் - வைரமுத்து, கமல்.

இந்நிலையில்  இன்று மாலை 5 மணிக்கு விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் மூன்று மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. தமிழ் டிரெய்லரை ஸ்ருதி ஹாசனும் தெலுங்கு டிரெய்லரை ஜூனியர் என்டிஆரும் ஹிந்தி டிரெய்லரை அமீர் கானும் வெளியிடவுள்ளார்கள்.  இந்நிலையில் விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory