» சினிமா » செய்திகள்

ரஜினியின் பைத்தியக்காரத்தனம்: எஸ்.ஏ.சந்திரசேகர் தாக்கு!!

செவ்வாய் 12, ஜூன் 2018 5:35:25 PM (IST)"மக்களை போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்’ என ரஜினியை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விமர்சித்துள்ளார். 

விக்கி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டிராஃபிக் ராமசாமி’. சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க, அவர் மனைவியாக ரோகிணி நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், "இந்தப் படத்தின் இயக்குநர் விக்கி, என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். 

ஒருநாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து முடித்துவிட்டு, மறுநாளே ‘படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும், ஐந்தாறு முறை டிராஃபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை, உடை, பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன். இது, வாழ்க்கை முழுக்கப் போராடிவரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட, குழந்தை அழுதால்தான் கிடைக்கும். 

அப்படியிருக்கும்போது, போராட வேண்டாம் என்றால் எப்படி? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்திருக்குமா? மெரினா போராட்டம்தானே நம் கலாச்சாரத்தை மீட்டுக் கொடுத்தது? தூத்துக்குடி போராட்டம்தானே ஒரு ஆலையை மூடவைத்தது? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் . டிராஃபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும்” என்றார். சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களைப் பார்க்கவந்த ரஜினிகாந்த், ‘போராட்டங்களால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்’ என்று பேட்டியளித்தார். எனவே, அவரை விமர்சித்து இவ்வாறு பேசியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.


மக்கள் கருத்து

சந்தனுJun 15, 2018 - 10:02:51 PM | Posted IP 162.1*****

மரமண்டைகளுக்கு புரியாது - 144 தடை உத்தரவு போட்டு இருக்கிறது, ஆகவே நாங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லும் இந்த நடிகர் கூட்டம் - அந்த விவரத்தை மக்களுக்கு சொன்னால் - இழப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்குமே -

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory