» சினிமா » செய்திகள்

உழைத்து முன்னேறிய சத்யராஜ்: சிவகுமார் புகழாரம்!

புதன் 13, ஜூன் 2018 12:15:30 PM (IST)

ஜமீன் பரம்பரையில், கடுமையாக உழைத்து முன்னேறிய முதல் நபர் சத்யராஜ் என நடிகர் சிவகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரித்துள்ளார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் போன்றோர் நடித்துள்ளார்கள். தெலுங்கிலும் வெளியாகும் இந்தப் படத்துக்கு சின்னபாபு என்று பெயரிடப்படுள்ளது. இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன. 

இந்த விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:  இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாளாக இருக்கும். ஏனென்றால் என் பிள்ளைகளின் மாமனான சத்யராஜை வைத்து எங்கள் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. அதில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ளார். சத்யராஜ் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர். அப்படி இருந்தும் அவர் சென்னைக்கு வந்து ரத்தம் சிந்தி கடுமையாக உழைத்து முன்னேறியுள்ளார். ஜமீன் பரம்பரையிலிருந்து வந்து கடுமையாக உழைத்து முன்னேறிய முதல் நபர் சத்யராஜ்தான். 

சத்யராஜ் காலகட்டத்தில் வந்த நடிகர்களில், அவர் மட்டும் தான் இன்னும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவுக்கும் கார்த்திக்கும் சத்யராஜ் தன்னுடைய முதல் சம்பளத்தில் இனிப்பு வாங்கித் தந்தார். அவரை வைத்து இன்று சூர்யா படம் தயாரிக்கிறார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். நிஜமாக இன்றுதான் வாழ்கையில் எனக்கு சந்தோஷமான நாள். இதைவிட எனக்கு மகிழ்ச்சியான நாள் இருக்கமுடியாது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory