» சினிமா » செய்திகள்

எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தீர்ப்பு: கஸ்தூரி சர்ச்சை ட்வீட்

வெள்ளி 15, ஜூன் 2018 4:21:02 PM (IST)

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை திருநங்கைகளோடு நடிகை கஸ்தூரி ஒப்பிட்டு தெரித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரிது எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.    

இதனால், 3வதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி " அரசியல் ரீதியாக இது தவறான நகைச்சுவை.. இரு வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே! 18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்! எனக் குறிப்பிட்டு இரு அரவாணிகளின் புகைப்படங்களை இணைத்திருந்தார். 

இதைக்கண்ட பலரும் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். எனவே, அந்தப் புகைப்படத்தை முதல் நீக்கிய கஸ்தூரி, கொஞ்சம் நேரம் கழித்து பதிவையும் நீக்கிவிட்டார். மேலும், இது போன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்கவேண்டுகிறேன்” என பதிவிட்டார்.


மக்கள் கருத்து

நிஹாJun 16, 2018 - 02:08:34 PM | Posted IP 162.1*****

செய்தது தவறுதான். உடனடியாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதது மனித தன்மை. பிறரை போல அட்மின் செய்த தவறு, படிக்காமல் பார்வேர்ட் செய்துவிட்டேன் என்று கோழை போல ஓடி ஒளியவில்லையே.

சந்தனுJun 15, 2018 - 09:59:28 PM | Posted IP 162.1*****

செமத்தியாக ஒருநாள் ------

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory