» சினிமா » செய்திகள்

விஜய் டிவியின் பிக்பாஸ் 2 : போட்டியாளர்கள் விபரம்!!

திங்கள் 18, ஜூன் 2018 10:57:14 AM (IST)விஜய் டிவியின் பிக்பாஸ் 2 வீட்டிற்குள் நடிகர் பொன்னம்பலம், நடிகர் தாடி பாலாஜி, தாடி பாலாஜியின் மனைவி உட்பட 16பேர் போட்டியாளர்களாக சென்றுள்ளனர். சிறப்பு விருந்தினராக நடிகை ஓவியா பங்கேற்றுள்ளார். 

பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்கும் போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக யாஷிகா ஆனந்த் அறிமுகம் செய்யப்பட்டார். 18 வயது நிரம்பிய போட்டியாளர், சக போட்டியாளர்களை விட இளம் வயது போட்டியாளர் இவர்தான். துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்தவர்.

அடுத்த 2வது  போட்டியாளர் பொன்னம்பலம் ஆவார். இவர் நாட்டாமை உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர். வில்லத்தனத்திலும் சிறு காமெடியை செய்தவரும் இவர் தான். 3-வது போட்டியாளர் மகத். இவர் அஜித்வுடன் மங்காத்தா படத்தில் நடித்தவர். ஜில்லா படத்தில் விஜயின் தம்பியாக நடித்தவர். 4-ஆவது போட்டியாளர் டேனி. இவர் இதற்குதான் ஆசைப்பட்டாய் படத்தில் நடித்தார். பிரெண்ட் லவ் மேட்டர் என்ற வசனம் மூலம் புகழ்பெற்றார். காமெடியனாக அறிமுகமான இவர் பல்வேறு வேடங்களில் நடித்து கொண்டிருக்கிறார். 

5-ஆவது போட்டியாளர் வைஷ்ணவி. இவர் எழுத்தாளர் சாவியின் பேத்தியாவார். ரேடியோ ஜாக்கியாக உள்ளார். பிக்பாஸ் சீசனில் 6-ஆவது போட்டியாளர் ஜனனி ஐயர். சென்னையை சேர்ந்தவர். கோபாலபுரம் டிஏவியில் படித்தார். சவீதா பொறியியல் கல்லூரியில் என்ஜீனியரிங் படித்தார். இவர் அவன் இவன், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 7-ஆவது போட்டியாளர் ஆனந்த் வைத்தியநாதன். கர்நாடக இசை பாடகர். இவர் சூப்பர் சிங்க்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார். 8-ஆவது போட்டியாளர் ரம்யா. இவர் பாடகியாவார். பழம்பெரும் நடிகரும் நகைச்சுவை மன்னருமான என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நடிப்பிசை புலவர் கே.ஆர். ராமசாமி ஆகியோரது பேத்தியாவார்.

9-ஆவது போட்டியாளர் சென்றாயன். இவர் வில்லன், காமெடி ரோலில் நடித்துள்ளார். பொல்லாதவன் படத்தில் பைக் திருடும் ரோலில் நடித்துள்ளார். 10-ஆவது போட்டியாளர் ரித்விகா. இவர் மெட்ராஸ் படத்தில் நடித்தவர். கபாலியில் ரஜினியை அப்பா அப்பா என்று அழைப்பார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 11-ஆவது போட்டியாளர் மும்தாஜ். இவரை டி. ராஜேந்தர் அறிமுகப்படுத்தினார். இவரது முதல் படம் மோனிஷா என் மோனாலிசா. தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக நடித்தவர்.12-ஆவது போட்டியாளராக தாடி பாலாஜி பங்கேற்று உள்ளார். இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் 3 நடுவர்களில் ஒருவர் இவர். இவருக்கு நித்யா என்ற மனைவியும், குழந்தையும் உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் 13-ஆவது போட்டியாளர் மமதி. இவர் விஜேவாக இருந்தார். வாணி ராணி தொடரில் வில்லியாக நடித்தார். மிக அழகான குரலுக்கு சொந்தக்காரர். 14-ஆவது போட்டியாளர் நித்யா. இவர் பெண்கள் மேம்பாட்டுக்கான அமைப்பை நடத்தி வருகிறார். இவர் தாடி பாலாஜியின் மனைவி. தாடி பாலாஜி குறித்து காவல் துறையில் புகார் குறித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

பிக்பாஸ் வீட்டுக்கு 15-ஆவது போட்டியாளராக வந்தார் ஷாரிக் ஹாசன். இவர் கமலா காமேஷின் பேரன், ரியாஸ் கான்- உமா தம்பதியின் மகனாவார். பிக்பாஸ் வீட்டுக்கு 16-ஆவது போட்டியாளராக வந்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்துள்ளார். கொல்கத்தாவை சேர்ந்தவர். 


மக்கள் கருத்து

சாமிJun 19, 2018 - 05:38:13 PM | Posted IP 162.1*****

கலாச்சார சீரழிவு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory