» சினிமா » செய்திகள்

சாமி 2: விக்ரம் ஜோடியாக திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா!

புதன் 4, ஜூலை 2018 12:01:17 PM (IST)ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில், திரிஷாவுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படம் கடந்த 2003ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. 15 ஆண்டுகள் கழித்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்திலும் விக்ரம் ஹீரோவாக நடிக்க, ஹரியே இயக்கியிருக்கிறார். விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரம் ஏற்றுள்ளார். தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் படத்தை தயாரித்துள்ளார்.

முதல் பாகத்தில் விக்ரமின் ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் கீர்த்தி சுரேஷுடன் இன்னொரு நாயகியாக திரிஷாவே நடித்திருப்பதாக முன்னர் கூறப்பட்டது. இதனை ஹரியும் உறுதி செய்திருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான சாமி 2 டிரெய்லரில் திரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. எனவே அவர் இதில் நடித்திருக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், இதனை உறுதிபடுத்தும் வகையில் சாமி 2ல் ஐஸ்வர்யா ராஜேஷ் மாமி கதாபாத்திரத்தில் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளது தெரியவந்தது.

இதுதொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம், விக்ரமும் ஐஸ்வர்யாவும் இணைந்திருக்கும் படத்தை வெளியிட்டுள்ளது. சாமி 2ல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் என்ற அறிவிப்பையும் அந்நிறுவனம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. இதனால் திரிஷா ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இரண்டாம் கதாநாயகியாக நடிக்க அழைத்ததால், படத்தில் இருந்து திரிஷா விலகியயுள்ளதாக கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory