» சினிமா » செய்திகள்

தமிழ்ப்படம் 2வில் மாதவன், விஜய் சேதுபதி, பிரேம்ஜி!!

செவ்வாய் 10, ஜூலை 2018 12:34:46 PM (IST)பல படங்களை கலாய்த்து எடுக்கப்பட்டுள்ள தமிழ்ப்படம் படத்தில், மாதவன், விஜய் சேதுபதி, சித்தார்த், ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தமிழ்ப்படம் 2. சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில், ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் கஸ்தூரி. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் இசையமைத்துள்ளார். 

வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 12) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதன் முதல் பாகம், 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டாம் பாகமோ 15 நிமிடங்கள் குறைவாக, அதாவது 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முதல் பாகத்தைவிட இந்தப் பாகத்தில் கிண்டல் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பல படங்களை கலாய்த்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், மாதவன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சித்தார்த், பிரேம்ஜி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory