» சினிமா » செய்திகள்

ஸ்ரீகாந்த், லாரன்சைத் தொடர்ந்து விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்!

சனி 14, ஜூலை 2018 12:34:12 PM (IST)தமிழ்த் திரையுலகில் தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றியவர்கள் பற்றிய பட்டியலை வெளியிடுவது தொடர்பாக, நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இதேபோல் தமிழ் சினிமா உலகிலும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, வாய்ப்பு அளிக்காதவர்களின் பட்டியலை வெளியிடப்போவதாக கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக இவர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறத் தொடங்கியுள்ளார்.

சென்னை ஹோட்டல் ஒன்றில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பிரபல இயக்குநர் முருகதாஸ் மீது புகார் கூறிய ஸ்ரீரெட்டி அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் மீது குற்றம் சாட்டினார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது புதிய புகார் ஒன்றைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி. இந்தப் பதிவில் ராகவா லாரன்ஸ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து விளக்கமாகத் தெரிவித்திருந்தார் அவர்.

அடுத்தடுத்து தமிழ் திரையுலகப் பிரபலங்கள் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்து வருவது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் விஷால் தனக்கு மிரட்டல் விடுத்திருப்பதாக புதிய பதிவு வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் சங்கத் தலைவர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக அவர் கூறியுள்ளார். ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை தைரியமாக வெளியிட உள்ளதாகவும் அப்பதிவில் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். ஸ்ரீரெட்டியின் தொடர் குற்றச்சாட்டுகளால் கோலிவுட் பிரபலங்கள் பலர் பயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory