» சினிமா » செய்திகள்

‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை தட்டிச்சென்ற செந்தில் கணேஷ்!!

திங்கள் 16, ஜூலை 2018 11:26:16 AM (IST)விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியின் டைட்டிலை செந்தில் கணேஷ் தட்டிச் சென்றார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. சீனியர், ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியின் சீனியர் 6 சீஸனின் இறுதிப்போட்டி, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர சந்தோஷ் நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

மொத்தம் 22 போட்டியாளர்கள் கலந்துகொண்ட ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில், ஸ்ரீகாந்த், ரக்‌ஷிதா, ஷக்தி, செந்தில் கணேஷ், அனிருத், மாளவிகா ஆகிய 6 பேரும் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில், ஒவ்வொருவரும் இரண்டு பாடல்கள் பாடினர். அதில், ‘சூப்பர் சிங்கர் 6’ பட்டத்தை செந்தில் கணேஷ் தட்டிச் சென்றார்.  ரக்‌ஷிதா இரண்டாமிடமும், மாளவிகா மூன்றாமிடமும் பெற்றனர். செந்தில் கணேஷுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்படுகிறது. ரக்‌ஷிதாவுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகள் பரிசாக வழங்கப்பட்டது.  மாளவிகா ரூ.2 லட்சம் பரிசு பெற்றார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடலைப் பாடும் வாய்ப்பை செந்தில் கணேஷும், ஸ்ரீகாந்தும் பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory