» சினிமா » செய்திகள்

எம்.ஜி.ஆருக்கு நான் தீவிர ரசிகன்: கவிஞர் வைரமுத்து

திங்கள் 16, ஜூலை 2018 12:46:24 PM (IST)

எம்.ஜி.ஆருக்கு நான் தீவிர ரசிகன், நான் அவருக்காக பாட்டு எழுதவில்லை. நான் எழுதியது, அவருக்கான இரங்கல் பாட்டு மட்டுமே என  கவிஞர் வைரமுத்து பேசினார்.

சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: இங்கு கூடியுள்ளவர்கள் எம்.ஜி.ஆரால் பயன்பெற்றவர்கள் மட்டுமல்ல, எம்.ஜி.ஆருக்கும் பயன்பட்டவர்கள். இறந்து 31 ஆண்டுகளுக்கு பிறகும் கூட ஒரு மனிதனின் பெயர் மங்காமல் இருக்கும் பாக்கியம் யாருக்கும் கிடைத்ததில்லை.

3-ம் வகுப்பை தாண்டாத மனிதர், தமிழுக்கு தமிழகத்தில் பல்கலைக்கழகம் வைக்கும் அளவுக்கு உயர்ந்தார். இன்றைக்கு அமெரிக்கா வரைக்கும் பொறியியல் படிப்பில் நம் மாணவர்கள் வளர்ந்து வருகிறார்கள் என்றால், அது எம்.ஜி.ஆர். போட்டுக்கொடுத்த கல்வித்திட்டத்தால் தான். எம்.ஜி.ஆருக்கு நான் தீவிர ரசிகன். அவர் தனது சிறிய வயதில் சோற்றுக்கு கஷ்டப்பட்டவர். அதனால் தன்னை தேடி வரும் அனைவரையும் ‘சாப்பிட்டீங்களா?’, என்று கேட்பார். எம்.ஜி.ஆரை பற்றி பாட்டெழுத எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் எழுதியது, அவருக்கான இரங்கல் பாட்டு மட்டுமே. இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் மாலையில் கவியரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பின்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. சைதை துரைசாமி, ஏசி சண்முகம், ஐசரி கணேஷ் ஆகியோர் ஆடியோவை வெளியிட நடிகர்கள் பிரபுதேவா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory