» சினிமா » செய்திகள்

நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் காலமானார்!

வியாழன் 6, செப்டம்பர் 2018 12:19:54 PM (IST)

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன்  காலமானார். அவருக்கு வயது 74.

தமிழில் ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண் சோறு, கோயில் யானை உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன். மிமிக்ரி கலைஞராகப் புகழ்பெற்ற இவர், பிறகு திரைத் துறையிலும் நுழைந்தார். மேடைகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று அதிகக் கவனம் பெற்றார். 

தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் என்கிற பெயரையும் பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகள் பெற்றவர். 74 வயதான ராக்கெட் ராமநாதன், சமீபகாலமாக உடல்நலக்குறைவுடன் இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு பானுமதி என்கிற மனைவியும் சாய்பாலா என்கிற மகளும் சாய் குருபாலாஜி என்கிற மகனும் உள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory