» சினிமா » செய்திகள்

பிக்பாஸ் புகழ் ஜூலியின் அம்மன் - பக்தை அவதாரம்!

வியாழன் 6, செப்டம்பர் 2018 4:47:31 PM (IST)அம்மன் தாயி என்ற படத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி அம்மனாகவும், அம்மனின் பக்தையாகவும் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். 

பிக்பாஸ் சீசன் 1 மூலம் புகழ் பெற்றவர் ஜூலி, பிக்பாஸில் இருந்து வெளியேறிய சூட்டோடு நடன இயக்குனர் கலா, கலைஞர் தொலைக்காட்சியில் வழங்கி வரும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நடன நிகழ்ச்சியின் தொகுப்பாளரானார். அதோடு தனியார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பணியையும் செய்து வந்த ஜூலி, நீட் தேர்வு மதிப்பெண் குறைவின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் சேர இயலாமல் தற்கொலை செய்து கொண்டவரான மாணவி அனிதா நினைவாக எடுக்கப்படவிருக்கும் திரைப்படமொன்றில் அனிதாவாக நடிக்கத் தேர்வானார். 

அதற்கான போஸ்டர்கள் முன்பே வெளியாகின. இதெல்லாம் பழைய கதை. சமீபத்திய புதுக்கதை பிக்பாஸ் 1 ஜூலி அம்மனாக  நடிக்கவிருப்பது தான். படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அம்மன் தாயி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜூலி அம்மனாகவும், அம்மனின் பக்தையாகவும் இரு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் பாடல்களை அம்மன் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடுகிறார். இத்திரைப்படத்தின் இயக்குனர் மகேஸ்வரன். கேசவ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் இத்திரைப்படத்தை சந்திரஹாசன் தயாரித்து வருகிறார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory