» சினிமா » செய்திகள்

நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்!

வியாழன் 6, செப்டம்பர் 2018 4:51:03 PM (IST)

நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. 

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர் வெள்ளை சுப்பையா. கோவை அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்தவர். ஜெய்சங்கர் நடித்த மாணவன் என்கிற படத்தில் அறிமுகமானார். வைதேகி காத்திருந்தாள் படத்தில் மேகங்கருக்கையிலே பாடலை திரையில் பாடியது இவர்தான். பிறகு சமீபகாலமாக அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். 

2014-ம் வருடம் தன்னுடைய புற்று நோய் சிகிச்சைக்கான செலவுக்கு அரசு உதவவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். உடல்நலக் குறைவின்றி இருந்த சுப்பையா கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி, நேற்றிரவு காலமானார். அவருக்கு சாவித்திரி என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory