» சினிமா » செய்திகள்

ரஜினியின் 2.0 டீஸர் 13-ம் தேதி ரிலீஸ்: ஷங்கர் அறிவிப்பு

வெள்ளி 7, செப்டம்பர் 2018 5:20:42 PM (IST)ரஜினி காந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீஸர் வருகிற 13-ம் தேதி ரிலீஸாகும் என இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 2.0. ரஜினி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், எமி ஜாக்சன் ஹீரோயினாகவும், அக்‌ஷய் குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இதை, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த வருடமே இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாலும், கிராபிக்ஸ் வேலைகள் காரணமாக இன்னும் படம் ரிலீஸாகவில்லை.

பலமுறை ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவித்துள்ளார் ஷங்கர். இந்த முறையாவது தள்ளிப் போகாமல் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸாக வேண்டும் என்ற வேண்டுதலுடன் காத்திருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.இந்நிலையில், வருகிற 13-ம் தேதி 2.0 டீஸர் ரிலீஸாகும் என அறிவித்துள்ளார் ஷங்கர். அதுவும் 3டி தொழில்நுட்பத்தில் ரசிக்கத் தயாராகுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதனால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory