» சினிமா » செய்திகள்

சன்னிலியோனுடன் அமலாபாலை ஒப்பிட்ட ரசிகர்கள்!!

சனி 8, செப்டம்பர் 2018 5:13:32 PM (IST)



அமலாபால் ‘ஆடை’ படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ள அவரது முதல் தோற்றம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அதைப் பார்த்து இந்தி நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி என்று பலரும் பேசினர்.  இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அமலாபாலின் கவர்ச்சி தோற்றத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. எந்த தமிழ் நடிகையும் இதற்கு முன்பு இவ்வளவு கவர்ச்சியாக தோன்றியது இல்லை என்கின்றனர்.  இவ்வளவு கவர்ச்சியாக நடித்துள்ளதால் அவர்தான் அடுத்த சன்னிலியோன் என்று டுவிட்டரில் சிலர் மோசமான கருத்துக்களையும் பதிவிட்டு உள்ளார்கள்.

செல்போன்களில் இலவசம் என்று வரும் குறுந்தகவல்களையும் அதனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்தும் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. அமலாபால் பழிவாங்கும் கதாபாத்திரத்தில் வருகிறார். கதை பிடித்ததால் கவர்ச்சிக்கு சம்மதித்ததாக கூறினார்.  அதே நேரம் ஆடை இல்லாமல் நடித்துள்ள அவரது துணிச்சலையும் சிலர் பாராட்டி உள்ளனர். விமர்சனங்களுக்கு பதில் அளித்து அமலாபால் கூறும்போது, ‘‘எனது முதல் தோற்றத்தை பார்த்து விமர்சிப்பவர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டுவார்கள். அந்த ஆடையுடன் நான் ஏன் அப்படி நடித்தேன் என்பது படம் பார்க்கும்போது தெரியவரும்’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்

திங்கள் 17, செப்டம்பர் 2018 12:05:03 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory