» சினிமா » செய்திகள்

விஜய் சமுதாயத்திற்கு தேவை : சர்கார் விழாவில் ராதாரவி பேச்சு

செவ்வாய் 2, அக்டோபர் 2018 8:23:33 PM (IST)நடிகர் விஜய் சமுதாயத்திற்கு தேவை என சர்கார் பட இசை வெளியீட்டு  விழாவில் ராதாரவி பேசினார்.

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையிலுள்ள ஒரு பொறியில் கல்லூரியில், மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய், மீண்டும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து சர்கார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம், வரும் தீபாவளியன்று வெளியாக உள்ளது. இதையடுத்து, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிம்டாங்காரன், ஒரு விரல் புரட்சி என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.  

இன்று கோலாகலமாக தொடங்கிய இருந்த இசை வெளியீட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கில் அங்கு ரசிகர்கள் குவிந்துள்ளனர். பல ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவைக் காண டிக்கெட் இல்லாததால் ஏமாற்றத்துடன் வெளியே காத்துக்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதா ரவி விஜய்யைப் பார்த்து. நீ சமுதாயத்திற்கு தேவை. நீ சமுதாயத்திற்கு வேண்டும் என்று சொன்னதற்கே இந்த கைத்தட்டல் என்றால், நீ இறங்கி வந்தால் என்ன நடக்கும். இது இசை வெளியீட்டு விழா இல்லை, சிறிய மாநாடு, எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory