» சினிமா » செய்திகள்

பேட்ட படத்தில் மேலும் ஒரு ஹீரோ... ரஜினியுடன் இணையும் சசிகுமார்!!

வெள்ளி 5, அக்டோபர் 2018 12:41:02 PM (IST)

கார்த்தி சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தில் ரஜினியுடன் தற்போது நடிகர் சசிகுமார் இணைந்து நடிக்கிறார்.

மூன்று வருடத்துக்கு ஒருமுறை ரஜினி படம் ரிலீஸான வரலாறு உண்டு. இப்போது, ஒரே நேரத்தில் 2.0, பேட்ட என அடுத்தடுத்து ரஜினி தீவிரம்காட்டிவருகிறார். முதலில் டார்ஜிலிங், அடுத்து டேராடூன், அதன்பிறகு லக்னோ, இப்போது வாரணாசி என பேட்ட படப்பிடிப்பு பிஸியாக நடக்கிறது. ரஜினி, விஜய்சேதுபதி இணைந்து மிரட்டும் காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட்டன.

அடுத்து சில காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டு முடிந்து விட்டது. இப்போது ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரஸ்யமான காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார், இயக்குநர் கார்த்தி சுப்புராஜ். ரஜினியின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குவதை ரகசியமாக வைத்துள்ளார்கள். ரஜினியோடு ஒரு ஹீரோ பாபிசிம்ஹா, இன்னொரு ஹீரோ விஜய்சேதுபதி நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதில், தற்போது இன்னொரு ஹீரோவும் நடிக்கிறார். இதைப் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. 

அதுவேறு யாரும் அல்ல, நடிகர் சசிகுமார் தான் தற்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ரஜினியின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராக சசிக்குமார் நடிக்கிறார். தற்போது வாரணாசியில் நடந்துகொண்டிருக்கும் படப்பிடிப்பில், ரஜினியோடு சசிக்குமார் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது ஹாட் நியூஸ். ஏற்கெனவே, ரஜினியின் மருமகன் தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டாவில் அவருக்கு அண்ணனாக சசிக்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory