» சினிமா » செய்திகள்

காசி விஸ்வநாதர் கோயிலில் ரஜினிகாந்த் வழிபாடு

புதன் 10, அக்டோபர் 2018 5:09:25 PM (IST)

காசி விஸ்வநாதர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

பேட்ட படத்தின் ரஜினி மதுரைக்கார இளைஞராக தோன்றும் போஸ்டர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. பிளாஷ்பேக் காட்சிகளில் இந்த இளமையான தோற்றத்தில் வருகிறார். இது தொடர்பான காட்சிகள் காசி மற்றும் காசியை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. ரஜினி சண்டையிடுவது போன்ற காட்சியும் விஜய்சேதுபதி ஆயுதங்களுடன் ஓடுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது. நேற்று படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவு 10 மணி அளவில் ரஜினிகாந்த் காசி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதுபோல் திரிஷாவும் நேற்று காசி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார். காசியில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடரும் என்றும் அடுத்த வாரம் ரஜினி சென்னை திரும்புவார் என்றும் கூறுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory