» சினிமா » செய்திகள்

தட்டிவிட்ட செல்போனுக்குப் பதிலாக ரூ.21ஆயிரத்தில் புதிய செல்போனை வழங்கினார் சிவக்குமார்!!

வெள்ளி 2, நவம்பர் 2018 12:25:50 PM (IST)

தட்டிவிட்ட செல்போனுக்குப் பதிலாக ரூ. 21,000 மதிப்புள்ள செல்போனை இளைஞருக்கு வழங்கியுள்ளார் நடிகர் சிவக்குமார். 

மதுரையில் தனியார் மருத்துவமனை தொடர்பான விழா ஒன்றில்  நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டபோது அவருடன் இணைந்து செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார்.  இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிமிடம் முதல் சிவக்குமாரின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்தார்கள்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் சிவக்குமார் வெளியிட்ட விடியோவில் கூறியதாவது: ஆர்வம் மிகுந்த ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்வார்கள். ஒரு பிரபலக் கலைஞர் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவக்குமார் செல்போனைத் தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில் என செயலுக்காக உளமாற வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது, அந்த இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்யும் விதமாக புதிய செல்போனை வழங்கவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். இந்நிலையில் அந்த இளைஞர் ராகுலுக்கு ரூ. 21,000 மதிப்புள்ள செல்போனை வழங்கியுள்ளார் நடிகர் சிவக்குமார். நடிகர் என்கிற ஆர்வத்தில் செல்ஃபி எடுத்தேன். இனிமேல் அனுமதியின்றி செல்ஃபி எடுக்கமாட்டேன் என்று ராகுல் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory