» சினிமா » செய்திகள்

ரஜினியின் 2.0 வெற்றிபெற கமல்ஹாசன் வாழ்த்து

சனி 3, நவம்பர் 2018 5:35:21 PM (IST)

ரஜினிகாந்தின் திரைப்பட வரலாற்றில் 2.0 ஒரு மைல் கல் என கமல்ஹாசன் கூறி உள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.இதுவரை இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியின்போது படத்தின் 4டி டிரைலரை படக்குழு ஒளிபரப்பியது. 3டி கண்ணாடி மூலம் அரங்கில் இருந்த அனைவரும் இந்த டிரைலரை கண்டுகளித்தனர். 2.0 படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அக்ஷய் குமார் இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் ரஜினிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O திரைப்படம் வெற்றி பெற கமல் வாழ்த்து தெரிவித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பட வரலாற்றில் 2.0 ஒரு மைல் கல் என  கமல்ஹாசன்  கூறி உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory