» சினிமா » செய்திகள்

2.0 என டைட்டில் வைத்ததற்குக் காரணம்: ஷங்கர் விளக்கம்!

சனி 3, நவம்பர் 2018 5:50:19 PM (IST)2.0 என படத்துக்கு டைட்டில் வைத்ததற்குக் காரணம், எந்த மொழியாக இருந்தாலும் சொல்வதற்குச் சுலபமாக இருக்கும் என இயக்குநர் ஷங்கர் கூறினார். 

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.  நவம்பர் 29 அன்று வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. ரஜினி, ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இப்படவிழாவில் கலந்துகொண்டார்கள். படவிழாவில் ஷங்கர் பேசியதாவது: ரஜினி சாரை இந்தப் படத்தில் வசீகரனாக, சிட்டியாக, 2.0-வாகப் பார்க்கப் போகிறீர்கள். படத்தில் ரசிகர்களுக்கு நிறைய ஆச்சர்யங்கள் உள்ளன. 2.0 என படத்துக்கு டைட்டில் வைத்ததற்குக் காரணம், சொல்லும்போது நன்றாக இருந்தது. எந்த மொழியாக இருந்தாலும் சொல்வதற்குச் சுலபமாக இருக்கும். 

இந்திய சினிமாவுக்காக யாரும் இவ்வளவு செலவு பண்ணமுடியாது. ஆனால் படத்தின் மீது நம்பிக்கை வைத்து செலவு செய்தார் தயாரிப்பாளர் சுபாஷ்கரன். என்னை எப்போதும் ஊக்கப்படுத்துவது ரசிகர்கள்தான். சின்னச் சின்ன யோசனைகள் வந்துள்ளன. 3.0 உருவாக வாய்ப்புள்ளது. பார்க்கலாம்.  நமக்குப் பிடித்த நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று படம் செய்யாமல் முதலில் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துவிட்டுப் படம் இயக்குங்கள். அதன்பிறகு கதைக்கு ஏற்றாற்போல் நடிகர்கள், தயாரிப்பாளர்களின் தேர்வு இருக்கவேண்டும். 

ரஜினி சாருக்குச் சில சமயம் உடல்நிலை சரியில்லாத போதும், காலில் காயம் ஏற்பட்டபோதும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். அவர் இப்போதும் எது செய்தாலும் கவரும் விதத்தில், ஸ்டைலாக, மாஸாக உள்ளன. இன்றைக்கும் அவருடைய நடிப்பு புதுமையாக உள்ளது. ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள். இதுபோன்ற படத்தை ஆதரியுங்கள். நம் ஊரிலும் இப்படியொரு படம் எடுக்கமுடியும் என்று உலகத்துக்குக் காண்பிக்கமுடியும். அதனால், இதுபோல நிறைய படம் வரும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory