» சினிமா » செய்திகள்

மாரி 2 படத்தில் ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி

வெள்ளி 9, நவம்பர் 2018 5:48:15 PM (IST)மாரி 2 படத்தில் ஆட்டோ டிரைவர் அராத்து ஆனந்தியாக சாய்பல்லவி ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைத்தளத்தில் டிரென்டிங் ஆகி வருகிறது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி படம் 2015–ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் ‘மாரி–2’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. இதில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக வருகிறார். வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், ரோபோ சங்கர் ஆகியோரும் உள்ளனர். யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

அதிரடி மற்றும் நகைச்சுவை படமாக மாரி–2 உருவாகி உள்ளது. தனுசே தயாரித்து உள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் படத்தில் சாய்பல்லவி ஆட்டோ டிரைவராக நடிக்கும் அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி இந்திய அளவில் டிரென்டிங் ஆகி வருகிறது. சாய் பல்லவியின் வித்தியாசமான தோற்றத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். சாய்பல்லவி ஏற்கனவே தியா படத்தில் நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்திலும் நடித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory