» சினிமா » செய்திகள்

இலவச மிக்ஸி, கிரைண்டருடன் சர்கார் படக்குழு வெற்றிக் கொண்டாட்டம்

திங்கள் 12, நவம்பர் 2018 12:50:40 PM (IST)சர்கார் படத்தின் பெரிய வெற்றியை நேற்றுக் கொண்டாடியிருக்கிறது அப்படத்தின் படக்குழு. அதிமுக அரசை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் ஆகிய மாதிரிகள் இடம்பெற்றிருந்தன. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். சர்கார் படத்தில், தமிழக அரசின் இலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். பிறகு சர்கார் படம் மறு தணிக்கை செய்யப்பட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. 

இந்நிலையில் சர்கார் படம் முதல் நான்கு நாள்களில் ரூ. 150 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. இந்நிலையில் சர்கார் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நேற்று கொண்டாட்ட நிகழ்வு நேற்று நடைபெற்றது. விஜய், ஏ.ஆர். முருகதாஸ், ஏ.ஆர். ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் இதில் கலந்துகொண்டார்கள். இந்தக் கொண்டாட்டத்தில் வித்தியாசமான கேக் ஒன்று வெட்டப்பட்டது. அதில், சர்கார் படத்திலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட காட்சியை நினைவுபடுத்தும் வகையில் மிக்ஸி, கிரைண்டர் ஆகிய மாதிரிகள் கேக்கில் இடம்பெற்றிருந்தன.  இது அதிமுக அரசை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory