» சினிமா » செய்திகள்

பேட்ட படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : பொங்கலுக்கு வெளியாகிறது

புதன் 14, நவம்பர் 2018 1:05:43 PM (IST)




பேட்ட படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பேட்ட என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். 

இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முறுக்கு மீசையில் ரஜினி இருப்பது போன்ற படத்தையும் படக்குழு வெளியிட்டது. தற்போது இப்படத்தின் அடுத்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் படத்தை பொங்கலுக்கு வெளியிட இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory