» சினிமா » செய்திகள்

"பரியேறும் பெருமாள்" மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்!

புதன் 14, நவம்பர் 2018 4:10:09 PM (IST)

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அதிகக் கவனம் ஈர்த்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இதுகுறித்து தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் . அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் "கடைசியாக பெரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்துவிட்டேன். அட்டகாசமான படம். நிஜ வாழ்க்கையை வெளிப்படுத்திய விதத்தில் நீங்களும் கதையுடன் கலந்துவிடுவீர்கள். என்னுடைய அடுத்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் (கலைப்புலி தாணு) தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். அவரைப் போன்ற ஒரு திறமைசாலியுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன் என்று கூறியுள்ளார் தனுஷ்.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர், பரியேறும் பெருமாள் என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் கதாநாயகனாகவும் ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - ஸ்ரீதர். கலை - ராமு. செப்டம்பர் 28 அன்று வெளியான இப்படத்துக்கு நல்ல விமரிசனங்களும் பாராட்டுகளும் கிடைத்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory