» சினிமா » செய்திகள்

ரஜினியின் 2.0 படத்துக்குத் யு/ஏ தணிக்கை சான்று!!

புதன் 14, நவம்பர் 2018 4:45:43 PM (IST)

ரஜினியின் 2.0 படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.  

நவம்பர் 29 அன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்தப் படம் திட்டமிட்டபடி வரும் 29 அன்று வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவரவுள்ளதால் இப்படத்துக்கு இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory