» சினிமா » செய்திகள்

மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

புதன் 14, நவம்பர் 2018 5:31:32 PM (IST)

தெறி, மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி  கூட்டணி 3வது முறையாக மீண்டும் இணைகிறது. 

சர்க்கார் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. விஜய்யின் 63-வது படமான இது அவருடைய திரைப்படங்களில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

தெறி, மெர்சல் படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யுடன் இணைந்து தயாரிக்கும் 3-வது படமிது. ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு என தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் 2019 தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிNov 15, 2018 - 03:31:39 PM | Posted IP 172.6*****

இது தெறி மெர்சல் ராஜாராணி படங்களின் மொத்த கலவையாக இருக்குமோ???? பழைய படங்களின் ஒட்டு மொத்த கலவையாக இருக்கும் என்பது உறுதி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory