» சினிமா » செய்திகள்

ரஜினியின் பேட்ட படத்தின் டிரைலர் 28ம் தேதி ரிலீஸ்!

புதன் 26, டிசம்பர் 2018 10:33:54 AM (IST)

ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் டிரைலர் வரும் 28 தேதி வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதின் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. பேட்ட படத்தின் புரோமோஷனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இப்படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பார்வை, டீசர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பேட்ட திரைப்படத்தின் டிரைலர் வரும் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே ரஜினி பிறந்தநாளை யொட்டி வெளியாக டீசர் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory