» சினிமா » செய்திகள்

ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரெய்லர் வெளியீடு

வெள்ளி 28, டிசம்பர் 2018 11:09:19 AM (IST)

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரெய்லர் இன்று காலை வெளியானது.

பேட்ட படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இன்று (28–ந் தேதி) டிரெய்லர் வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்து இருந்தது.  அதன்படி  இன்று காலை 10.25-க்கு டிரெய்லர் வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே ரஜினியின் தோற்றங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. அதில் இளமையாக இருந்தார். வேட்டி சட்டையிலும் ஒரு தோற்றம் இருந்தது. 

இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. ரஜினி விடுதி வார்டனாக நடிக்கிறார் என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிராக அவர் போராடுவதுதான் கதை என்றும் கூறப்பட்டது. இன்னும் சிலர் தமிழகத்தில் நடக்கும் ஆணவ கொலைகளே படத்தின் கதை என்றனர். ஆனாலும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.  விஜய் சேதுபதி, சசிகுமார், நவாஜுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory