» சினிமா » செய்திகள்

ரஷ்யா, உக்ரைனில் ரிலீஸ்: அஜித்தின் விஸ்வாசம் புதிய சாதனை

வெள்ளி 28, டிசம்பர் 2018 12:43:33 PM (IST)

விஸ்வாசம் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. முதன்முறையாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் விஸ்வாசம் வெளியாகவுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ் உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இப்படத்துக்கு தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. தற்போது டீஸர், ட்ரெய்லர் வெளியீட்டுப் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது, வெளிநாட்டு வெளியீட்டில் புதிய மைல்கல்லை எட்டவுள்ளது விஸ்வாசம்.

முதன்முறையாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் வெளியாகும் முதல் அஜித் படமாகவும், இந்த நாடுகளில் வெளியாகும் 4-வது தமிழ்ப் படமாகவும் விஸ்வாசம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசம் படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory