» சினிமா » செய்திகள்

திரைப்படமாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை: ஹீரோவாக விவேக் ஓப்ராய்..!!

சனி 5, ஜனவரி 2019 4:52:40 PM (IST)பிரதமர் மோடியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படத்தில் விவேக் ஓப்ராய் ஹீரோவாக நடிக்க உள்ளார். 

தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்கிற படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங் வேடத்தை ஏற்று நடித்துள்ளார். கடந்த 2004 முதல் 2008 முதல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடகத் துறை ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு, தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் எழுதிய புத்தகத்தைத் தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடிக்கும் பிஎம் நநேந்திர மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. வருகிற 7-ம் தேதி இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

முருகன்Jan 9, 2019 - 03:24:02 PM | Posted IP 141.1*****

இந்தியாவிற்கு கோடிக்கணக்கில் வெளிநாடு முதலீடு பல கோடி வந்துள்ளது தனிமனிதனாக பயணம் மேற்கொண்டதால் அடுத்த நாடும் துணிந்து முதலீடு செய்யும்.ஒரு ஒரு அமைச்சராக சென்றால் எந்த நாடும் துணிந்து முதலீடு செய்யாது .பிரதமரே நேராக கேட்க்கும் போது நிச்சயமாக மற்ற நாடுகள் துணிவாக முதலீடு செய்யும் .இதை பாராட்ட வேண்டும் .மோடி தன் தேசத்தை காப்பாற்ற வளர்க்க முயல்வது பலருக்கும் பயம் .தொடர்ந்து அவர் பிரதமராக வரக்கூடாது என்பதை சிலர் விருப்பம்

ராமநாதபூபதிJan 8, 2019 - 04:37:18 PM | Posted IP 162.1*****

ஒரே ஏரோபிளான் சத்தமா இருக்குமே பரவாயில்லையா????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory