» சினிமா » செய்திகள்

தமிழகத்தில் நடிகர்கள் முதல்வராக வரக்கூடாது: சத்யராஜ்

திங்கள் 7, ஜனவரி 2019 5:01:56 PM (IST)

தமிழகத்தில் நடிகர்கள் முதல்வராக வரக்கூடாது  என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மலையாள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் கேள்வி ஒன்றுக்கு சத்யராஜ் பேசும்போது, எனது 41 வருட சினிமா பயணத்தில் அரசியல் எப்போதும் என்னைக் கவர்ந்ததில்லை. தியாகமும், அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டுகிற முதல்வர் பதவிக்கு நாங்கள் தகுதியற்றவர்கள். முதல்வராக வேண்டும் என்றால் ஆரம்பத்திலிருந்து மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு  நாம் பயணிக்க வேண்டும்.

சினிமாவில் உள்ள பிரபலத்தைப் பயன்படுத்தி முதல்வராக வேண்டும் என்பது சரியான முறையல்ல. நடிகர்களின் அரசியல் என்பது முதல்வர் பதவிக்கானது. மக்களின் சேவைக்கானது அல்ல.நான் கேரள முதலவர் பினராயி விஜயனை மதிக்கிறேன். அவர் சிறந்த அரசியல்வாதி. அவரைப் போல தமிழகத்திலும் நல்ல தலைவர்கள் உள்ளனர். நாம் முதல்வர்களை திரைத்துறையிலிருந்து தேர்ந்தெடுக்கக் கூடாது. உதாரணத்துக்கு தமிழகத்தில் நல்லகண்ணு என்ற சிறந்த தலைவர் இருக்கிறார். அவரைப் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

MaiyanJan 7, 2019 - 08:03:46 PM | Posted IP 162.1*****

எப்படி எம்.ஜி.ஆர் இருந்தப்ப இதுலாம் தெரியல உங்களுக்கு ... நடிகர்கள் சரி அப்ப உங்க நண்பர் இயக்குனர் சீமான் வரலாமா ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory