» சினிமா » செய்திகள்

தீவிர அரசியலுக்கு வருவது எப்போது? ரஜினிகாந்த் பதில்

வெள்ளி 11, ஜனவரி 2019 12:15:50 PM (IST)

அரசியலுக்கு எப்பொழுது வரப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று அதிகாலையிலேயே ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்து படத்தை பார்த்து ரசித்தனர். பேட்ட படம் குறித்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினிகாந்த் பேட்ட திரைப்படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன்; 

அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள். பேட்ட படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் என்னை உசுப்பேற்றி, உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள் என்று கூறினார். தொடர்ந்து தீவிரமாக படத்தில் நடித்து வரும் நீங்கள் எப்பொழுது தீவிரமான அரசியலுக்கு வரப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சற்று மழுப்பலாக அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory