» சினிமா » செய்திகள்

நாஞ்சில் சம்பத் நல்ல மனிதர் : ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்!!

திங்கள் 18, பிப்ரவரி 2019 11:21:08 AM (IST)

நாஞ்சில் சம்பத், தனது பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட முடியாமல் வறுமையில் இருப்பதாக எல்.கே.ஜி. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலங்கியபடி தெரிவித்தார் ஆர்.ஜே.பாலாஜி.

ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் முதலானோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எல்.கே.ஜி. இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது: இரண்டு பேருக்கு ரொம்பவே நன்றி சொல்லணும்னு தோணுது. ராம்குமார் சார். அவர், நடிகர் பிரபு சாரின் அண்ணன். மிகப்பெரிய பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனா, பந்தா எதுவும் இல்லாம பழகினார். எனக்குத் தெரிந்து அறுவடைநாள், ஷங்கரின் ‘ஐ’ படங்களில்தான் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும்படி அவரிடம் கேட்டேன்.

உடனே அவர், ‘உனக்காக நடிக்கிறேன்’னு சொல்லி ஒத்துக்கிட்டார். பிரமாதமாவும் நடிச்சுக் கொடுத்தார். தவிர, ராம்குமார் சார், நல்லா இங்கிலீஷ் பேசுவார். இதுலயும் நிறைய இங்கிலீஷ் டயலாக்கெல்லாம் பேசியிருக்கார். அடுத்து நன்றிக்குரிய மனிதர், நாஞ்சில் சம்பத் சார். இந்தப் படத்துல அவர் நடிச்சா நல்லாருக்கும்னு அவருக்கு போன் பண்ணிட்டு அவர் வீட்டுக்குப் போனேன். சென்னை பட்டினப்பாக்கத்துல, ஹவுஸிங்போர்டுல வீடு. 600 சதுர அடி வீடு அது.

அந்த வீட்டைப் பாக்கும்போதே ஒருமாதிரியா இருந்துச்சு. அவர்கிட்ட கதையெல்லாம் சொல்லிட்டு, ‘படத்துல எனக்கு அப்பாவா நடிக்கணும் சார்’னு சொன்னேன்.ஒருநிமிஷம் யோசிச்சார். என்னைப் பாத்தார். ‘சரி, நடிக்கிறேன். ‘என் பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டுறியா?’ன்னு கேட்டாரு. 40 வருஷமா அரசியல்ல இருக்கார். பல அரசியல்வாதிகள், காலேஜே கட்டியிருக்காங்க. ஆனா நாஞ்சில் சம்பத், பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டமுடியலை. ரொம்பவே வேதனையா இருந்துச்சு.

படத்துல அவருக்கு நெகட்டீவ் அரசியல்வாதி ரோல்தான். ஆனா இவரோட குணம் தெரிய ஆரம்பிச்சப்போ, இவரோட நல்ல மனசு புரிஞ்சப்ப, அவரோட கேரக்டரை ரீ ஒர்க் பண்ணினோம். அவரோட குணத்தை வைச்சே கேரக்டர் பண்ணினோம்.அடுத்ததா சிவகார்த்திகேயன் படத்துல நடிக்கிறார் நாஞ்சில் சம்பத் சார். தொடர்ந்து நிறைய படங்கள் நடிச்சு, நிறைய சம்பாதிக்கணும். இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory