» சினிமா » செய்திகள்

நடிகர்கள் மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள்

திங்கள் 11, மார்ச் 2019 4:54:11 PM (IST)பிரபல நடிகர்கள் மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என மொத்தம் 112 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களில் முதல் கட்டமாக 56 பேருக்கு இன்று (திங்கட்கிழமை) விருது வழங்கப்பட்டது. 

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பத்ம விருதுகளை வழங்கி கெளரவிவித்தார். இந்நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். பிரபல நடிகர்கள்கள்  மோகன்லால், தமிழகத்தை சேர்ந்த பிரபுதேவா, உள்ளிட்டோர் பத்ம விருதுகளை பெற்றனர்.  பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட 112 பேரில் முதற்கட்டமாக 58 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள நபர்களுக்கு 16ம் தேதி விருதுகள் வழங்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory