» சினிமா » செய்திகள்

தேர்தலால் இந்தியன் 2 தள்ளிவைப்பு – அதிருப்தியில் ஷங்கர்?

புதன் 13, மார்ச் 2019 5:38:25 PM (IST)

மக்களவைத் தேர்தலில் பிஷியாக இருப்பதால் இந்தியன் 2 படத்திற்கான ஷூட்டிங்கை தேர்தலுக்குப் பின் வைத்துக்கொள்ளலாம் என கமல் கூறியதால் படக்குழு அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலானாலும்ம் 2.0 பட ரிலீஸ் தாமதம், கமலின் அரசியல் பணிகள் போன்றவற்றால் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே போனது. கடைசியாக ஒரு வழியாக ஜனவரி 18 அன்று இந்தியன் 2 படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக உருவானது. ஆனால் ஆரம்பித்து சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்குக் காரணம் கமலின் இந்தியன் தாத்தா மேக் அப்பில் இயக்குனர் ஷங்கர் திருப்தி அடையவில்லையாம். எனவே மேக் அப் விஷயங்கள் தொடர்பாக வேறு சில முயற்சிகள் செய்யப்பட்டன. அதற்கிடையில் இருந்த இடைவெளியில் கமல் தனது அரசியல் பணிகளில் கவனம் செலுத்தினார்.
 
ஆனால் அதன் பிறகு தொடங்கிய படப்பிடிப்பு சில நாட்களிலேயே முடிந்தது. அதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாலும் கமல் தேர்தலில் போட்டியிட இருப்பதாலும் இப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.  அதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு தேர்தலுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் ஷங்கர் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory