» சினிமா » செய்திகள்

சிவகார்த்திகேயன் - அர்ஜூன் இணையும் ஹீரோ பூஜையுடன தொடங்கியது!!

புதன் 13, மார்ச் 2019 5:50:27 PM (IST)



பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் - அர்ஜூன் நடிப்பில் உருவாகும் "ஹீரோ" படம் பூஜையுடன் இன்று தொடங்கியது.

`மிஸ்டர். லோக்கல் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே சிவகார்த்திகேயனின் 15-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில், சிவகார்த்திகேனுடன் ரோபோ ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த படத்திற்கு `ஹீரோ என்று தலைப்பு வைத்துள்ளனர்.  

இந்த படத்தில் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அரசியல் கலந்த த்ரில்லர் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.  24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்த இந்த படத்தை தயாரிக்கின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory